ஷகிப் அல் ஹசன் பயணித்த ஹெலிகொப்டர் விபத்து ; ஒருவர் பலி

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் ஷகிப் அல் ஹசன் பயணித்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.

shakib-al-hasan

ஷகிப் அல் ஹசன் மற்றும் அவரது மனைவி ஆகியோரை விளம்பர படப்பிடிப்பில் இறக்கிவிட்ட பின்னர் டாக்கா நோக்கி பயணித்த குறித்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளாகியுள்ளது.

ஹெலிகொப்டரில் ஏற்பட்ட தொழினுட்ப கோளாறு காரணமாக விபத்து விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்து ஷகிப் அல் ஹசன் தரையிறங்கிய இடத்திலிருந்து சுமார் 1.5 கிலோமீற்றர் தூரத்தில் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த ஷகிப் அல் ஹசன் தான் நலமாக இருப்பதாகவும், விபத்து தனக்கு அதிர்ச்சி தந்துள்ளதாகவும் தெரிவித்ததோடு, விபத்து தொடர்பில் பேச முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

Related Posts