ஶ்ரீ வல்லிபுர ஆழ்வார் கோவில் வருடாந்த உற்சவம் இன்று!

சரித்திரப் பிரசித்தி பெற்ற வடமராட்சி அருள்மிகு ஶ்ரீ வல்லிபுர ஆழ்வார் கோவில் வருடாந்த மகோற்சவம் இன்று 12 ஆம் திகதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது.

17 தினங்கள் இடம்பெறும் இம் மகோற்சவத்தின் சப்பறத் திருவிழா 25 ஆம் திகதி வௌ்ளிக்கிழமையும் தேர்த்திருவிழா 26 ஆம் திகதி சனிக்கிழமையும், சமுத்திரத் தீர்த்திருவிழா 27 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையும், அதனைத் தொடர்ந்து கேணித் தீர்த்த திருவிழாவும் கொடியிறக்கமும் 28 ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெறவுள்ளன.

மகோற்சவத்துக்கு வருகை தரும் பக்தர்கள் பண்பாட்டு உடைகளுடன் வந்து வழிபடுவதுடன், தங்க நகைகள் அணிந்து வருவதைத் தவிர்க்குமாறு வல்லிபுரக் கோவில் அறங்காவலர் சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

Related Posts