ஶ்ரீ லங்கன் எயார் லைன்சை முன்னேற்ற தனியாருடன் கைகோர்க்க முடிவு

ஶ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்தை இலாபம் ஈட்டும் நிறுவனமாக முன்னோக்கி கொண்டு செல்ல பங்குதார நிறுவனம் ஒன்றுடன் இணைந்து செயற்பட, அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதனால் விரைவில் பிரபல வர்த்தகர் அல்லது நிறுவனத்துடன் இணைக்கப்பாட்டுக்கு வரவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அலரி மாளிகையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார்.

Related Posts