வௌிநாட்டுத் தீவிரவாதிகள் பட்டியலில் இருந்த 16 குழுவினர் மற்றும் நூற்றுக்கு மேற்பட்ட தமிழர்களை விடுவிக்க திட்டமிட்டுள்ளதாக வௌிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கடந்த ஆட்சிக் காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளைப் பேணியதாக குற்றம்சாட்டப்பட்டு சில புலம்பெயர் அமைப்புக்களும் தனிப்பட்ட நபர்களும் தடை செய்யப்பட்டிருந்தனர்.
இந்தநிலையில் உரிய ஆதாரங்கள் இன்றி தடை செய்யப்பட்ட அமைப்புக்கள் தனிப்பட்ட நபர்களுக்கு எதிரான தடையை நீக்குவது குறித்து கவனம் செலுத்தப்படும் என மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை எதிர்வரும் ஜூலை மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் ஷயிட் ராத் அல்குசைன் இலங்கைக்கு விஜயம் செய்வார் எனவும் வௌிவிவகார அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.