வௌிநாட்டிலிருந்து வந்த 174 பேர் கிளிநொச்சிக்கு அழைத்துவரப்பட்டனர்!

வௌிநாட்டிலிருந்து அழைத்துவரப்பட்ட 174 பேர் கிளிநொச்சி, இரணைமடு விமானப்படை இராணுவ முகாமிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

இவர்கள், இன்று (சனிக்கிழமை) காலை 5 பேருந்துகளில் அழைத்துவரப்பட்டுள்ள நிலையில் இரணைமடுவில் அமைந்துள்ள விமானப்படை முகாமில் வைத்து கொரோனா தொற்று குறித்து அவர்கள் கண்காணிக்கப்படவுள்ளனர்.

வெளிநாடுகளில் இருந்து அழைத்துவரப்பட்டவர்கள் இலங்கையர்கள் எனவும், நாட்டில் காணப்படும் கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக அவர்களை 15 நாட்கள் குறித்த பகுதியில் வைத்து கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் இதுவரை இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts