முல்லைத்தீவில் தீவிரமாக பரவி வரும் இன்புளுவன்சா பி வைரஸ்தொற்று தொடர்பில் ஆராய, வடமாகாண சுகாதார அமைச்சர் ஞா.குணசீலன் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைகளுக்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
மல்லாவி, மாங்குளம், ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு ஆகிய மருத்துவமனைகளுக்கு விஜயம் மேற்கொண்ட அவர் வைரஸ்தொற்று தொடர்பிலான நிலைமைகளை மருந்துவர்களிடம் கேட்டறிந்துக் கொண்டதோடு முல்லைத்தீவு மாவட்டத்தின் மாவட்ட மருத்துவமனையின் பொது வைத்திய நிபுணர் மற்றும் மருத்துவமனை இயக்குனர் மற்றும் சம்மந்தப்பட்ட சிகிச்சை பிரிவினரையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
கடந்த மூன்று மாதங்களுக்குள் நூறு நோயாளர்கள் விடுதியில் தங்கவைத்து சிகிச்சையளிக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளார்கள். இவர்களில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 9 பேர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இறந்துள்ளனர்.