வைரலாகும் ஸ்ருதிஹாசனின் பிட்ச் வீடியோ

நடிகை ஸ்ருதிஹாசன் ஒரு பெண்ணியவாதி என்பது அனைவரும் அறிந்ததுதான். அவர் தற்போது நவீன பெண்களுக்கு ஆதரவாக பி தி பிட்ச் என்ற தலைப்பில் ஒரு வீடியோவை இணைய தளத்தில் வெளியிட்டுள்ளார்.

பொதுவாக ஆண்கள் பெண்களை குறைவாக மதிப்பிட்டு சொல்கிற வார்த்தை பிட்ச். அந்த வார்த்தையை அப்படியே பாசிட்டிவாக மாற்றி அதற்கு விளக்கம் அளித்து அவரே நடித்தும் உள்ளார். தூங்கி எழுந்து குளித்துவிட்டு படப்பிடிப்புக்கு கிளம்புவது முதல் படப்பிடிப்பு முடிந்து திரும்புகிற வரையிலான காட்சிகள் அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது.

இதுகுறித்து ஸ்ருதிஹாசன் கூறியதாவது: காலம் காலமாக பெண்கள் பல விதங்களில் கொடுமைப்படுத்தப்பட்டு வருகிறார்கள். ஆனால் இன்றைய பெண்களை அப்படிச் செய்ய முடியாது. கல்வியும், புதிய வாய்ப்புகளும் அவர்களை உயர்த்தியுள்ளது. பிட்ச் என்ற வார்த்தை அர்த்தமற்றதாகி உள்ளது. அந்த வார்த்தையை மாற்றும் விதமாக இந்த வீடியோவை உருவாக்கி உள்ளேன். நானே எழுதி, நானே பேசி, நடித்தும் இருக்கிறேன். என்கிறார் ஸ்ருதி. இந்த வீடியோ இணைய தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Related Posts