வைத்திய விடுதி பிரச்சினை ஆராய்வதற்கு குழு நியமனம்

Jaffna Teaching Hospitalயாழ். போதனா வைத்தியசாலையின் வைத்திய விடுதி பிரச்சினைகளை ஆராய்வதற்கு 18 பேர் கொண்ட குழு ஒன்றினை நியமித்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் செ.ஸ்ரீபவானந்தராஜா தெரிவித்தார்.

யாழ். போதனா வைத்தியசாலையில் உள்ள வைத்தியர் விடுதியை பகிர்ந்தளிப்பது தொடர்பாக வைத்தியசாலை பணிப்பாளருக்கும் வைத்தியர் சங்கத்திற்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டது.

இந்த முரண்பாட்டினை தீர்க்கும் முகமாக சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகத்தின் உத்தரவின் பேரில் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவில் 15 வைத்தியர்கள் உட்பட வைத்தியசாலை ஊழியர் ஒருவர் மற்றும் வைத்தியசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இருவர் அடங்கலாக 18 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த குழுவின் தலைவராக சிரேஷ்ட சத்திர சிகிச்சை நிபுணர் என். சிவகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த குழுவினர் விடுதி பிரச்சினைகளை ஆராய்ந்து பரிந்துரைகளை வழங்குமாறு சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் பணித்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

Related Posts