புற்றுநோய் வைத்திய நிபுணர் என்.ஜெயக்குமார் வீட்டின் மீதான தாக்குதல் தொடர்பான வழக்கு சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக யாழ். பிரதேச உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.சி.எம்.மொஹமட் ஜெப்ரி தெரிவித்தார்.
இந்த தாக்குதல் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸ் அத்தியட்சகர், வைத்தியர்கள் மீதான தாக்குதல்களை மேற்கொள்பவர்களை இணங்காட்ட சிலர் தயங்குவதாகவும் கூறினார்.
எவ்வாறாயினும் துரிதமான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாகவும், தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாகவும் அவர் மேலும் கூறினார்.
மேலும்
பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் 27பேர், மது போதையில் இடையூறு விளைவித்தவர்கள் 14பேர், மதுபோதையில் வாகனம் செலுத்தியவர்கள் 10பேர், சுற்றுச் சூழல் மாசடையும் வகையில் குப்பைக் கூழங்களை வீசியவர்கள் 15பேர், அனுமதியின்றி மணல் ஏற்றியவர், சமாதானத்திற்கு எதிராக இடையூறு விளைவித்த இருவர், மாடு வெட்டிய ஒருவர் உட்பட 72பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.