வைத்தியர் தாக்கப்பட்டமை தொடர்பில் பல்கலைக்கழக மாணவர் இருவர் கைது

arrest_1யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர் தாக்கப்பட்டமை தொடர்பில் யாழ்.பல்கலைக்கழக மாணவர் இருவர் கைது.

யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர் தாக்கப்பட்டமை தொடர்பில் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் இன்று செவ்வாய்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி விக்கிரமாராட்சி தெரிவித்துள்ளார்.

யாழ். பல்கலைக்கழகத்திற்கு அருகில் யாழ்.போதனா வைத்தியசாலை காது, மூக்கு தொண்டை சத்திரசிகிச்சை வைத்தியர் எஸ். பிரேம கிருஸ்ணா தாக்கப்பட்டதுடன் அவரது வாகனமும் சேதமாக்கப்பட்டுள்ளது இதனை அடுத்து வைத்தியரினால் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக யாழ்.பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி விக்கிரமாராட்சி குறிப்பிட்டுள்ளார்.

வைத்தியரின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளதுடன் வைத்தியரும் தாக்கப்பட்டுள்ளதாக முறைப்பாட்டில் வைத்தியரினால் குறிப்பிடப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி விக்கிரமாராட்சி மேலும் தெரிவித்துள்ளார்

Related Posts