பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்ட வைத்தியர் சிவசங்கரை தொடர்ந்தும் 10நாட்கள் தடுப்புக்காலில் வைத்து விசாரணைக்குட்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கின்றது.கடந்த 29ம் திகதி படையினரால் கைதுசெய்யப்பட்ட குறித்த வைத்தியர் 6மணித்தியாலம் இராணுவத்தினரின் விசாரணையின் பின்னர் மாங்குளம் காவற்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இதன்பின்னர் 4நாட்கள் பொலிஸாரின் கடுமையான விசாரணைக்குட்படுத்தப்பட்டிருந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இவர் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் ஆஜர்செய்யப்படுவார் என நம்பப்பட்டது. எனினும் விசாரணைகள் நிறைவடையவில்லை எனவும், நீதிமன்றிற்க்கு கொண்டுசெல்வதற்கு வாகனவசதி இல்லை எனவும் கூறிய காவற்துறையினர் நீதிமன்றில் ஆஜர்செய்ய முடியாது என கூறியிருந்தனர்.
எனினும் அன்றைய தினமே மாலை இரகசியமான முறையில் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதியின் முன்னால் வைத்தியரை ஆஜர்படுத்திய காவற்துறையினர் தொடர்ந்தும் 10நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணைக்குட்படுத்தும் உத்தரவினைப் பெற்றிருக்கின்றனர்.
எனினும் இந்தவிடயம் குறித்து இலங்கை வைத்தியர் சங்கம் பெரியளவில் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.