வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு!!

மாலபே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பிலான பிரச்சினை மற்றும் வைத்தியர்களின் தொழில் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் உரிய தீர்வினை பெற்றுத்தர தவறியுள்ளமை போன்ற காரணங்களை முன்வைத்து எதிர்வரும் 30ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் தொடர் பணி பகிஷ்கரிப்பு போராட்டம் ஒன்றுக்கு செல்ல அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்­பாக சங்­கத்தின் செய­லாளர் வைத்­தியர் ஹரித்த அலுத்கே தெரி­விக்­கையில்,

அரச வைத்­தி­யர்­களின் மேல­திக வேலை­நேர கொடுப்­ப­னவு மற்றும் ஏனைய கொடுப்­ப­ன­வுகள், வைத்­தி­ய­சா­லை­களில் நிலவும் பதவி வெற்­றி­டங்­க­ளுக்கு முறை­யான நிய­மனம் தொடர்­பாக நீண்­ட­கா­ல­மாக இடம்­பெற்­று­வரும் பிரச்­சி­னைகள் போன்­ற­வற்­றுக்கு தீர்வை பெற்­றுக்­கொள்ள பல வழி­க­ளிலும் முயற்­சித்­த­போதும் சுகா­தார அதி­கா­ரிகள் அதற்­கு­ரிய முறை­யான எந்த பதி­லையும் இது­வரை முன்­வைக்க தவ­றி­யுள்­ளனர். அத்­துடன் மாலபே தனியார் மருத்­துவ பீடத்தை கடந்த டிசம்பர் மாதம் 31ஆம் திக­தி­யுடன் முற்­றாக நீக்­கி­வி­டு­வ­தாக அர­சாங்கம் அறி­வித்­தி­ருந்­தது.

இருந்­த­போதும் அர­சாங்கம் சைட்­டத்தை மூடி­விட்டு அதில் கல்வி பயின்ற மாண­வர்­க­ளுக்கு நியா­ய­மான தீர்வை பெற்­றுக்­கொ­டுக்க இது­வரை எந்த நட­வ­டிக்­கையும் எடுக்­க­வில்லை.

அத்­துடன் சுகா­தார அமைச்சர் ராஜித சேனா­ரத்­னவின் நட­வ­டிக்­கைகள் தொடர்பில் எமது எதிர்ப்­பினை பலமுறை முன்­வைத்­தி­ருந்தோம். ஆனால் அவை கருத்­தில் ­கொள்­ளப்­ப­ட­வில்லை. இவ்­வா­றான நிலையில் இலங்கை மருத்­து­வ­சபை நிர்­வாக தேர்­தலின் பெறு­பே­றுகள் சுகா­தார அமைச்­சரின் செயற்­பா­டு­க­ளுக்கு பதி­ல­ளிக்கும் வகையில் அமைந்­துள்­ளன. இதன்மூலம் நாட்டில் இருக்கும் பெரும்­பான்­மை­யான வைத்­தி­யர்கள் சைட்டம் எதிர்ப்பு போராட்­டத்­துக்கு ஆத­ர­வ­ளித்­தி­ருக்­கின்­றனர்.

எனவே அர­சாங்கம் மாலபே தனியார் மருத்­துவபீடத்தை மூடி­விட உட­ன­டி­யாக நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும். வைத்­தி­யர்கள் எதிர்­நோக்­கி­வரும் தொழில் பிரச்­சி­னைகளுக்குரிய தீர்­வினை பெற்­றுத்­தர சுகா­தார அமைச்சர் மற்றும் அதி­கா­ரிகள் எதிர்­வரும் தினங்­க­ளுக்குள் முன்­வ­ரா­விட்டால் எதிர்­வரும் 30ஆம் திகதி எந்த தடைகள் வந்­தாலும் நாடு­பூ­ரா­கவும் தொடர்போராட்டம் மேற்கொள்வோம். எமது போராட்டம் காரணமாக பொதுமக்களுக்கு ஏற்படும் அசெளகரியங்களுக்கு சுகாதார அமைச்சரும் அதிகாரிகளுமே பொறுப்புக்கூறவேண்டும் என்றார்.

Related Posts