வைத்தியரின் கையடக்கத் தொலைபேசி மாயம்

hand-phone-robarryயாழ். போதனா வைத்தியசாலை வைத்தியரின் கையடக்க தொலைபேசி திருடப்பட்டுள்ளதாக குறித்த வைத்தியரினால் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.

குருநாகலையைச் சேர்ந்த் குறித்த வைத்தியர் யாழ். போதனா வைத்தியசாலையின் 7ஆம் இலக்க விடுதியில் கடமையாற்றுகின்றார்.

இவர் நேற்றயதினம் விடுதியில் உள்ள தனது அறை மேசையில் கையடக்க தொலைபேசியை வைத்து விட்டு, நோயாளர்களை பரிசோதனை செய்துள்ளார். திரும்பி வந்து விடுதி அறையில் பார்க்கும் போது மேசையின் மேல் வைக்கப்படடிருந்த 45,000 ரூபா பெறுமதியான கையடக்கத் தொலைபேசி காணாமல் போயுள்ளது.

இது பற்றி உடனடியாக யாழ். பொலிஸ் நிலையத்தில் அவர் முறைப்பாடு செய்துள்ளார்.இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக துரித விசாரணை மேற்கொண்டு வருவதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.

Related Posts