வைகோவின் தாயார் காலமானார்

வைகோவின் தாயார் மாரியம்மாள் இன்று காலை காலமானார். இவருக்கு வைகோ, வை.ரவிச்சந்திரன் என்ற 2 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர்.

vaiko-mother

வைகோவின் தாயார் மாரியம்மாள் கடந்த சில வாரங்களாக உடல்நலக்குறைவினால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு பாளையங்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிகிச்சை பலனின்றி இன்று காலையில் மரணமடைந்தார்.

அவர் உடல் நிலைகுறைவு காரணமாக நெல்லையில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அவரது இறுதிச்சடங்கு கலிங்கப்பட்டியில் நடைபெற உள்ளது. 95 வயதான மாரியம்மாள் பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றுள்ளார்.

சமீபத்தில் கலிங்கபட்டியில் நடைபெற்ற மதுவிலக்கு போராட்டத்தில் பங்கேற்றது நினைவிருக்கலாம். வைகோ கலிங்கப்பட்டி பயணம் இதனிடையே தனது தாயாரின் மரணச் செய்தி பற்றிய தகவல் அறிந்த உடன் சென்னையில் இருந்து விமானம் மூலம் வைகோ சொந்த ஊரான கலிங்கப்பட்டிக்கு விரைந்துள்ளார்.

Related Posts