மிருக பலியிடலை நிறுத்துவதற்கு 90 வீதமான ஆலயங்கள் சம்மதம் தெரிவித்திருப்பதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
மிருக பலியிடல் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நேற்று மாலை யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில் 25க்கும் மேற்பட்ட ஆலயங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போதே கலந்துகொண்ட ஆலயங்களில் 90 வீதமானவை மிருக பலியிடலை நிறுத்துவதற்கு ஒப்புதல் தெரிவித்திருந்ததாகவும் ஏனைய ஆலயங்களின் நிர்வாகத்தினர் தாம் இது தொடர்பாக தமது நிர்வாகத்துடன் கலந்தாலோசித்து முடிவினை தெரிவிப்பதாகவும் அவர்கள் கூறியிருந்ததாக அரச அதிபர் தெரிவித்துள்ளார்.