வேலை தேடுவோரின் விபரம் சேகரிப்பு

யாழ் மாவட்ட செயலகத்துடன் இணைந்து மனித வலு வேலைவாய்ப்பு திணைக்களத்தினால் மாவட்டத்தில் வேலை வாய்ப்பற்றுள்ள இளைஞர் யுவதிகளின் புள்ளிவபரங்கள் கணக்கிடப்பட்டு வருகின்றது.

இதன் படி மாவட்டத்திலுள்ள வேலையற்ற இளையோர்கள் எதிர்வரும் 25 ஆம் திகதி கரவெட்டியிலும், 29 ஆம் திகதி சண்டிலிப்பாயிலும், 30 ஆம் திகதி காரைநகர் மற்றும் சங்கானையிலும் ஜூலை மாதம் 03 ஆம் திகதி நெடுந்தீவிலும் 06 ஆம் திகதி உடுவிலிலும் 07 ஆம் திகதி ஊர்காவற்றுறையிலும், 09 ஆம் திகதி கோப்பாய், 10 ஆம் திகதி மருதங்கேணி, 13 ஆம் திகதி பருத்தித்துறையிலும் 14 ஆம் திகதி சாவகச்சேரியிலும் 16 ஆம் திகதி வேலணை ஆகிய பிரதேச செயலகங்களில் தமது பதிவுகளை மேற்கெள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Related Posts