வேலையில்லா பட்டதாரிகள் சங்கத் தலைவர் உள்ளிட்ட நால்வருக்கு விளக்கமறியல்

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டினபேரில் வேலையில்லா பட்டதாரிகள் சங்கத் தலைவர் உள்ளிட்ட நால்வர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

திருகோணமலையில் கடந்த ஏப்ரல் 24ஆம் திகதி இடம்பெற்ற வேலையில்லா பட்டதாரிகளின் ஆர்பாட்டத்தின்போது நீதிமன்ற உத்தரவை கிழித்து காலில் போட்டு மிதித்து நீதிமன்றத்தை அவமதித்தாக குற்றம் சாட்டப்பட்டு, அவர்களுக்கு திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தினால் அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது.

அதன்படி, குறித்த நால்வரும் நேற்றய தினம் நீதிமன்றத்தில் முன்னிலையான நிலையில் அவர்களை எதிர்வரும் 29ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related Posts