வேலையில்லா பட்டதாரிகளின் சங்கத்தினர் சத்தியாக்கிரக போராட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் இன்று புதன்கிழமை முதல் கொழும்பு – புறக்கோட்டையில் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
தமக்கான வேலைவாய்ப்பை பெற்றுத்தருவதாக நல்லாட்சி அரசாங்கம் உறுதியளித்திருந்த போதிலும் அதனை நிறைவேற்றவில்லையென தெரிவித்து இவர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்ட எதிர்ப்பு பேரணி, லோட்டஸ் சுற்றுவட்டம் வரை சென்றதோடு, இந்த சந்தர்ப்பத்திலேயே பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப் புகை பிரயோகங்களை மேற்கொண்டனர்.
இதற்கு கண்டனம் தெரிவித்தும் தமக்கான வேலைவாய்ப்புக்களை வழங்குமாறு கோரியுமே இவர்கள் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.