வேலையாட்களுக்கு வீடும் கட்டிக் கொடுத்து இன்வெர்ட்டரும் கொடுக்கும் அஜீத்

அஜீத் பிறருக்கு உதவி செய்யும் தாராள மனம் உள்ளவர் என்பது கோடம்பாக்கத்தில் உள்ள அனைவருக்கும் தெரியும். தனது வீட்டில் வேலை செய்பவர்களுக்கும் சொந்த வீடு இருக்க வேண்டும் என்று நினைத்தார்.

இதையடுத்து அவர்களுக்கு தனது செலவில் இடம் வாங்கி வீடு கட்டிக் கொடுத்து அசத்தினார். பணியாளர்களின் வீடுகள் அஜீத் வீட்டில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

அவர்கள் தினமும் தனது வீட்டிற்கு சிரமம் இல்லாமல் வந்து செல்ல வாகன வசதியும் செய்து கொடுத்துள்ளார். இந்நிலையில் அண்மையில் பணியாளர்கள் தாமதாக பணிக்கு வந்துள்ளனர்.

லேட்டாகிவிட்டது மன்னித்துவிடுங்கள் என்று பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஏன், என்னாச்சு என்று அஜீத் கேட்டுள்ளார். எங்க ஏரியாவில் இரவெல்லாம் மின்சாரம் இல்லை. அதனால் சரியாக தூங்கவில்லை என்று கூறியுள்ளனர்.

இதை கேட்ட அஜீத் தனது பணியாளர்களின் வீடுகளில் இன்வெர்ட்டர் பொருத்த ஏற்பாடு செய்துள்ளார்.

Related Posts