வேலையற்ற பிரச்சினைக்கு தீர்வு காணும் பொருட்டு அரசாங்கம் பொதுத்துறையில் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
சமய நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் குறித்த விடையம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
தனியார் மற்றும் பொதுத் துறைகளில் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என தெரிவித்த பிரதமர், தனியார் துறையிலுள்ள அனைத்து வேலைகளும் ஊழியர் சேமலாப நிதிக்கு தகுதி பெற வேண்டும் என கூறினார்.
அதுமட்டுமன்றி அரசாங்கதிற்குள் பல்வேறு பொருளாதார நெருக்கடிகள் நிலவிய போதும் கடந்த 2017 ஆம் ஆண்டு 1,900 மில்லியன் டொலர்கள் மதிப்புள்ள தனியார் முதலீடுகளை பெற முடிந்ததாக பிரதமர் சுட்டிக்காட்டினார்.
இருப்பினும் இந்த நிலை எதிர்வரும் 2020 ஆம் ஆண்டளவில் மாற்றமடையும் என்றும் அன்று முதலீடுகள் இதனை விட அதிகரிக்கப்படும் எனவே வேலையற்ற பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என பிரதமர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.