வேலையற்ற பட்டதாரிகளை அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமிக்க அரசு தீர்மானம்!

வேலையற்ற பட்டதாரிகளை அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமிக்க தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இந்த விடயமாக அந்த அமைச்சு வெளியிட்டுள்ள அறிவித்தலில் அரசாங்கம் வேலையில்லாப் பட்டதாரிகளிடமிருந்து மாவட்ட அடிப்படையில் பயிற்சிக்காகவும் நியமனத்திற்காகவும் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளத் தீர்மானித்துள்ளது.

சுய தொழில், தனியார் துறை, அரச சார்பற்ற அல்லது அரசதுறை ஆகிய எந்தத் துறைகளிலும் வேலைவாய்ப்பில்லாத பட்டதாரிகள் விண்ணப்பங்களை அனுப்பி வைக்க முடியும்.

உடல் உள ரீதியில் ஆரோக்கியமுள்ள இலங்கையில் எப்பாகத்திலும் பணியாற்றக் கூடிய 21 தொடக்கம் 35 வயதிற்கிடைப்பட்ட, வேலையற்ற பட்டதாரிகளான இலங்கைப் பிரஜைகள் எவரும், எதிர்வரும் செப்டெம்பெர் மாதம் 8ஆம் திகதிக்கு முன்னதாக கீழ் குறிப்பிட்ட முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பி வைக்க முடியும் என்று அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

தெரிவு செய்யப்படும் வேலையற்ற பட்டதாரிகளுக்கு ஒரு வருட கால பயிற்சியும் எல்லாக் கொடுப்பனவுகளும் உள்ளடங்கலாக மாதம் 20 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவையும் அரசு வழங்கும்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி : செயலாளர், தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சு, முதலாம் மாடி, மிலோதா, பழைய ரைம்ஸ் கட்டிடம், பிறிஸ்டல் வீதி, கொழும்பு 01.

Related Posts