வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு தயாராகும் தொழிற்சங்கங்கள்!

அரசாங்கத்தின் வரிக் கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல துறைகளைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளன.

அந்த வகையில் நாளை (புதன்கிழமை) இந்த வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதற்கமைய இன்று (செவ்வாக்கிழமை) இது இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அத்துடன் பணிப்புறக்கணிப்பு காரணமாக அத்தியாவசிய சேவைகளை மேற்கொள்ள முடியாமல் பொதுமக்கள் எதிர்கொண்டுள்ள சிரமங்களுக்கு அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டுமெனவும் தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்மையும் குறிப்பிடத்தக்கது.

Related Posts