வேலைக்காரனில் கெட்ட போலீசாக நடிக்கும் சிவகார்த்திகேயன்!

தனிஒருவன் படத்திற்கு முன்பு வரை ரீமேக் ராஜாவாக இருந்தவர் டைரக்டர் ஜெயம்ராஜா. அந்த படத்தை முதன்முறையாக சொந்த கதையில் இயக்கியதோடு மோகன்ராஜா என்றும் தனது பெயரை மாற்றினார். அந்த படம் ஹிட்டாகி அவரது கேரியரில் ஒரு நல்ல மாற்றத்தைக்கொடுத்தது.

அதனால், இந்த பெயரை தக்க வைத்துக்கொள்ளும் வகையில், இனிமேல் ரீமேக் படங்களை இயக்கப்போவதில்லை என்று முடிவெடுத்த மோகன்ராஜா, அதன்பிறகு இன்னொரு போலீஸ் கதையை ரெடி பண்ணி அதில் நடிக்க சிவகார்த்திகேயனை ஒப்பந்தம் செய்தார்.

ஏற்கனவே காக்கி சட்டை என்ற போலீஸ் கதையில் நடித்து தனக்கு சரியான ஹிட்டாக அமையாததால் இந்த கதை தனது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என்று மோகன்ராஜாவுக்கு கால்சீட் கொடுத்து நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

அதோடு அவர் நினைத்தது போலவே நயன்தாராவை ஹீரோயினாக புக் பண்ணியதால் பொன்ராம் இயக்கத்தில் நடிக்கயிருந்த படத்தைகூட தள்ளி வைத்து விட்டு இந்த படத்தில் தற்போது நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

மேலும், ரஜினியின் தீவிர ரசிகரான சிவகார்த்திகேயன் இந்த படத்துக்கு ரஜினி நடித்த பட டைட்டீலைதான் வைக்க வேண்டும் என்று சொன்னதால், இப்போது கதைப்படி வேலைக்காரன் பொருத்தமாக இருக்கும் என்று அந்த டைட்டீலை வைப்பதற்கு முடிவு செய்துள்ளனர்.

அதோடு, இந்த படத்தில் சிவகார்த்திகேயன் கெட்ட போலீசாக நடித்து வரும் காட்சிகளை தற்போது சென்னை சாலிகிராமத் திலுள்ள பிரசாத் ஸ்டுடியோவில் போடப்பட்டுள்ள செட்டில் படமாக்கி வருகிறார் மோகன்ராஜா.

Related Posts