வேலணை மனித புதைகுழியை தோண்ட அனுமதி

வேலணையில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் அடங்கிய பகுதி இன்று தோண்டப்படவுள்ளது.

human_born_09

வேலணை பிரதேச சபை வளாகத்தில் தோண்டப்பட்ட குழிக்குள் இருந்து மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதனையடுத்து குறித்த இடத்திற்கு வந்த ஊர்காவற்றுறை பதில் நீதவான் இ.சபேசன் குறித்த எச்சங்களை பரிசோதிக்குமாறு சட்ட வைத்திய அதிகாரிக்கு உத்தரவிட்டிருந்தார்.

அத்துடன் குறித்த புதைகுழி மனிதப்புதைகுழியாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் பதில் நீதவான் முன்னிலையில் இன்று தோண்டப்படவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்


வேலணை மனித எச்சங்கள் தொடர்பில் ஆய்வு

வேலணையில் மனிதப் புதைகுழி!

Related Posts