வேலணை மத்திய கல்லூரி பரிசளிப்பு விழாவில் வடமாகாண முதலமைச்சர் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்பு

வேலணை மத்திய கல்லூரயின் கல்லூரி தினமும் பரிசளிப்பு விழாவும் கல்லூரி அதிபர் திரு சி கிருபாகரன் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.

1

இதில் பிரதம விருந்தினராக வடமாகாண முதலமைச்சர் உயர்திரு க.வி.விக்னேஸ்வரனும் சிறப்பு விருந்தினர்களாக வட மாகாண கல்வியமைச்சர் உயர்திரு த. குருகுலராஜா , கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் உயர்திரு சி. சிறீதரன் , தீவக வலயக்கல்விப் பணிப்பாளர் திரு தி. ஜோன்குயின்ரஸ் , வேலணை பிரதேச சபை தவிசாளர் திரு. சி. சிவராசா ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் புதிதாக அமைக்கப்பட்ட நுழைவாயில் கலைமாடம் திறந்து வைத்தல், புதிதாக அமைக்கப்பட்ட சரஸ்வதி சிலை திரை நீக்கம் மற்றும் கல்லூரியின் காரண கர்த்தாக்களான அமரர்களான C.W.W கன்னங்கரா ,சேர் வை துரைச்சாமி , பண்டிதர் இ. மருதையினார் ஆகியோரின் உருவப்படங்கள் திரை நீக்கம் என்பனவும் இடம்பெற்றன.

3

இதில் மாணவர்களுக்கு அரிய பல கருத்துக்களை கூறிய முதலமைச்சர் வாழ்க்கையிலேயே மிகவும் மகிழ்ச்சியான பருவம் மாணவப் பருவம் தான் எனவும் குறிப்பிட்டார். மிகவும் கோலாகலமாக நடைபெற்ற இந்நிகழ்வில் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் தீவக கல்வி வலய அலுவலர்கள், அயல் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், தீவக கல்விச் சமூகத்தினர் எனப் பலதரப்பட்டவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

Related Posts