வேலணை பிரதேச அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்

velanaiசனசமூக நிலையங்கள் ஊடாக அபிவிருத்தியை முன்னெடுத்தல்’ என்ற கருப்பொருளில வேலணை பிரதேச சபைக்குட்பட்ட சனசமூக நிலையங்களின் உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் நேற்று வேலணை பிரதேச சபையின் புங்குடுதீவு உப அலுவலக மண்டபத்தில் நடைபெற்றது.

வேலணை பிரதேச சபையின் தவிசாளரும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் வேலணை பிரதேச அமைப்பாளருமாகிய சி.சிவராசா (போல்) தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது உரையாற்றிய வேலணை பிரதேச சபை தவிசாளர்,

கடந்த காலங்களில் திசை தெரியாமல் தழும்பியிருந்த தீவகப் பிரதேசம் தற்போது ஒரு நிர்வாகக் கட்டமைப்புக்குள்
உள்வாங்கப்பட்டுப் பல அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்துச் செல்கின்றது.

எனவே, இவ் அபிவிருத்தித் திட்டங்களை பாரியளவில் முன்னெடுப்பதற்கு அப் பிரதேசத்தில் இயங்கி வரும் சனசமூக நிலையங்களே முக்கிய பங்கை வகிக்கின்றது. எனவே இச் சனசமூக நிலையங்களில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள், கிராமத்தில் பற்றுடனும் அர்ப்பணிப்புடனும் எதிர்கால சந்ததியினருக்கு உகந்த வளத்தினைப் பெற்றுக் கொள்வதற்கு சமூக சிந்தனையுடன் செயற்படவேண்டும்.

தற்போது எமது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வழிகாட்டலின் கீழ் உங்களுடன் இந்த அபிவிருத்திப் பணிகளில் நாமும் கைகோர்த்து நிற்கின்றோம். எமது கிராமத்தின் வளர்ச்சிக்கு அமைச்சர் நிதிகளை ஒதுக்கித் தந்திருக்கிறார். அதனை மக்களுடனே சேர்ந்து செய்து கொள்ளுவதவற்கு தீமானித்துள்ளோம்’ என தெரிவித்தார்.

இந்நிகழ்வில், வேலணை பிரதேச சபை உறுப்பினர் த.தயானந்தன், சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி பாலசுப்பரமணியம், வேலணை பிரதேச சபை புங்குடுதீவு, உப அலுவலகப் பொறுப்பதிகாரி விஜயகுமார், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் புங்குடுதீவுப் பொறுப்பாளர் ஜ.சிவநேசன், ஹரிகரன் கார்த்திகா மற்றும் 16 சனசமுக நிலையங்களின் அங்கத்துவர்களும் கலந்துகொன்டனர்.

Related Posts