வேலணையில் மின்பாவனையாளர் சேவை நிலையம் திறந்து வைப்பு

வேலணையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மின்பாவனையாளர் சேவை நிலையத்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் திறந்து வைத்தார்.

velanai-3

வேலணைக்கு இன்றைய தினம் (14) விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அவர்கள் இந்நிலையத்தை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.

முன்பதாக பிரதான வாயிலில் வரவேற்கப்பட்ட ஜனாதிபதி அவர்கள் நினைவுக்கல்லை திரைநீக்கம் செய்து வைத்ததுடன் புதிய சேவை நிலையத்தையும் உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.

இலங்கை மின்சார சபையின் 5.52 மில்லியன் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட இப்புதிய கட்டிடத்தின் ஊடாக மின்பாவனையாளர்கள் தமது சேவைகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.

நீண்டகாலமாக இவ்வாறானதொரு நிலையம் இல்லாத காரணத்தினால் மக்கள் பல்வேறுபட்ட இடர்பாடுகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது இந்நிலையில் இக்கட்டிடம் அமையப் பெற்றுள்ளமையானது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts