வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை அணி வெற்றி

bast-ballயாழ்.மாவட்டக் கூடைப்பந்தாட்டச் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்.மாவட்டப் பாடசாலைகளின் 17 வயதுப் பிரிவு கூடைப்பந்தாட்ட அணிகளுக்கிடையில் இடம்பெற்று வரும் கூடைப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை அணி வெற்றிபெற்றது.

உடுவில் மகளிர் கல்லூரி மைதானத்தில் இப்போட்டி இடம்பெற்று வருகின்றது. இதில், புதன்கிழமை (11) நடைபெற்ற போட்டியில் உடுவில் மகளிர் கல்லூரி அணியும் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை அணியும் மோதின.

இப்போட்டியில் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை அணி 12:09 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றிபெற்றது.

Related Posts