வேம்படி பாடசாலை அலுவலகத்தைப் பூட்டி திறப்பை எடுத்துச் சென்றார் முத்துக்குமாரு ரஜனி

இன்று காலை வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை அலுவலகத்தைப் பூட்டி அதன் திறப்பை தன்னுடன் எடுத்துச்சென்றுள்ளார் வேம்படியில் பதில் அதிபராக இருந்த முத்துக்குமாரு ரஜனி . இதனால் இன்று தனது மகளை வேம்படியில் சேர்க்க வந்த யாழ் அரச அதிபர் வாகனத்துடன் நின்று காத்திருந்து விட்டு வெளியேறினார்.இவ்வாறான செயற்பாடுகள் தங்களது அதிகாரத்தை நிலை நிறுத்துவதற்காக ஆயிரக்கணக்கான மாணவிகளின் கல்வி நடவடிக்கையினை குழப்பும் விதமாக உள்ளது என மாணவர்களின் பெற்றோர்கள் கருத்துத்தெரிவிக்கின்றனர்

 

Related Posts