‘வேதாளம்’ வசூல் சாதனை, ‘தெறி’ முறியடிக்குமா ?

‘வேதாளம்’ படத்தின் டீசர் சாதனையை சர்வ சாதாரணமாக ‘தெறி’ படத்தின் டீசர் முறியடித்தது. அஜித் ரசிகர்கள்தான் இணையத்தை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற தவறான இமேஜை விஜய் ரசிகர்கள் உடைத்து எறிந்தனர். அது மட்டுமல்லாமல் ‘தெறி’ டீசர் இந்தியாவிலேயே அதிக லைக்குகளை வாங்கிய டீசராகவும் உலக அளவில் மூன்றாவது இடத்தைப் பிடித்த டீசராகவும் விளங்கியது. இன்னமும் அதன் ஹிட்டும், லைக்ஸும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

‘வேதாளம்’ டிசர் சாதனையை முறியடித்தது போலவே, படத்தின் வசூலையும் ‘தெறி’ முறியடிக்குமா என வினியோகஸ்தர்களும், தியேட்டர்காரர்களும், ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். சென்னையில் ‘தெறி’ படத்திற்கு நடந்த முன் பதிவைப் பார்த்து ரஜினிகாந்த் ரசிகர்களே ஆடிப் போய்விட்டார்கள் என்று தகவல் வருகிறது. இதுநாள் வரை தமிழ்த் திரையுலகத்தில் வசூல் சக்கரவர்த்தியாக பார்க்கப்பட்டவர் ரஜினிகாந்த். ஆனால், ‘தெறி’ படத்தின் முன்பதிவுக்குக் கிடைத்த வரவேற்பு ரஜினிகாந்த்தின் ‘கலெக்ஷன் சாதனை’யையும் சேர்த்து அசைத்துவிட்டது என்கிறார்கள்.

சமீப காலத்தில் அதிக வசூல் புரிந்த சாதனையை ‘வேதாளம்’ படம்தான் படைத்திருந்தது. தொடர்ந்து சுமாரான படங்களைக் கொடுத்து வந்த அஜித் ரசிகர்கள் ‘வேதாளம்’ வெற்றி என்றதும் ரொம்பவும் சந்தோஷமடைந்தார்கள். ஆனால், நடக்கும் முன்பதிவைப் பார்த்தால் ‘தெறி’ படத்தின் வசூலைக் கண்டு அஜித் ரசிகர்கள் மிரண்டு போகவே அதிக வாய்ப்புகள் இருக்கும் என விஜய் ரசிகர்கள் இப்போதே வம்பு செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். ‘தெறி’ வந்தால் அஜித் ரசிகர்களை ஓட விடுவார்கள் என்பது மட்டும் நிச்சயம்.

Related Posts