அஜித் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘வேதாளம்’. இதில் அஜித் இரண்டு வேடத்தில் நடித்திருக்கிறார். இதில் அஜித்துக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். மேலும் லட்சுமி மேனன், அஸ்வின், கபீர்சிங், ராகுல் தேவ், தம்பிராமையா ஆகியோர் நடித்துள்ளார்கள். சிறுத்தை சிவா இப்படத்தை இயக்கியிருக்கிறார்.
அனிருத் இசையில் இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியானது. இதில் இடம் பெற்ற ‘ஆலுமா… டோலுமா…’ பாடல் ரசிகர்களிடையே அதிகம் வரவேற்பு பெற்று வருகிறது. இந்த பாடலை அஜித்தின் தீவிர ரசிகரான ரோகேஷ் எழுதியிருக்கிறார். இவர் அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ படத்திற்கே பாட்டு எழுதும் வாய்ப்பை எதிர்பார்த்தாராம். ஆனால் கிடைக்கவில்லையாம். சமீபத்தில் இவர் பாட்டு எழுதிய ‘டங்கா மாரி…’, ‘டண்டனக்கா…’ பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் எதிரொலித்தது.
‘ஆலுமா…’ பாடல் ‘வேதாளம்’ படத்தில் இரண்டாம் பாதியில் இடம் பெறுகிறது. இப்படத்தில் இடம் பெறும் மற்றொரு பாடலான ‘வீர விநாயகா…’ பாடல் முதல் பாதியில் இடம் பெறுகிறது. மேலும் முதல் பாதியில் அஜித் அமைதியாகவும், தங்கையின் பாசக்கார அண்ணனாகவும் நடித்திருக்கிறார். இரண்டாம் பாதியில் ரசிகர்களை திருப்திப் படுத்தும் விதமாக நடித்திருக்கிறாராம்.
இப்படத்திற்கு தணிக்கை குழுவினர் யு சான்றிதழ் வழங்கியுள்ளனர். தீபாவளிக்கு இப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இப்படம் தீபாவளி தினத்திற்கு முன்னதாகவே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.