Ad Widget

வேட்பு மனு பரிசீலனை வேளையில் குழப்பம்! தேர்தல் ஆணையாளர் சுமந்திரனுக்கு நேரடி தொலைபேசி அழைப்பு ! இலங்கை தமிழரசுக்கட்சி என்ற பெயரை வெட்டி எழுதிய செயலாளர்!

இன்று வேட்பு மனு பரிசீலனை யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற வேளை ஈபிடிபி கட்சியின் தவராஜாவினால் ஆட்சேபனை ஒன்று தெரிவிக்கப்பட்டது.  இலங்கை தமிழரசுக்கட்சி என்ற பெயரை திருத்தி எழுதி அதன் மீது விண்ணப்பித்த கட்சியின் செயலாளருக்கு பதில் கட்சியின் தலைவர் கையாப்பமிட்டிருந்தார் என்பதே அது. இருப்பினும் பின்னர் வேட்பு மனு ஏற்கப்பட்டது. குழுத்தலைவரால் மாற்றம் செய்வதில் தவறில்லை என்றும் கூறப்பட்டது.

பரிசீலனை நேரத்தில்      உதவித்தேர்தல் ஆணையாளரால்  அலுவலக தொலைபேசி ஊடாக சுமந்திரனுக்கும்  தேர்தல் ஆணையாளருக்கும் இடையில் தொலைபேசி இணைப்பு  ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டது வேட்பாளர்களின்  தொலைபேசிப்பாவனை முற்றாக தடுக்கப்பட்ட வலயத்தில் இவ்வாறான இணைப்பினை ஏற்படுத்தியது ஏன் இவ்வாறு நடைபெற்றது என தவராசா தொடர்ந்து குழப்பம் ஏற்படுத்தினார்

அதற்கு சுமந்திரன் தான்  தமிழரசுக்கட்சியின் தேசியப்பட்டியல் உறுப்பினர் விபரம்  தொலைநகல் ஊடாக அனுப்பியதை கிடைத்ததா என்பதை உறுதிப்படுத்தவே தொடர்பு கொண்டதாக தெரிவித்தார்.  இது விடயத்தில் அங்கு கருத்து தெரிவித்த ஈபிடிபி தவராஜா  அதை ஏற்க முடியாது எனவும் தொலைபேசிகள் தடுக்கப்பட்ட பகுதியில் தேர்தல் ஆணையாளருடன் தொலைபேசித்தொடர்புகளை பேணக்கூடிய நிலையில் சுமந்திரன் இருப்பது தேர்தல் நடுநிலையானதாக இருக்குமா என சந்தேகம் எழுவதாக தெரிவித்தார்.

இதேவேளை சாதாரண வேட்பு மனுவில் தமிழரசுக்கட்சியின் பெயரை சரியாக முதல் தடவையிலேயே எழுதத்தெரியாமல் இருந்தமை பலராலும் விமர்சிக்கப்பட்டது.

tna

Related Posts