எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் சகல அரசியல் கட்சிகளும் தமது வேட்புமனுக்களில் 30 வீதமான இடத்தை பெண்களுக்கு வழங்க வேண்டும் என மகளிர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன் தேசிய பட்டியலில் மூன்றில் ஒரு வீதத்தை பெண்களுக்காக ஒதுக்குமாறும் அமைச்சு அரசியல் கட்சிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
கடந்த பொதுத் தேர்தலில் வேட்பாளர் பட்டியலில் பெண்களுக்கு 5.8 வீதம் வழங்கப்பட்டிருந்தது. இம்முறை 30 வீதம் பெண்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் மாத்திரமல்லாது, மாகாண சபைகள், உள்ளூராட்சி சபைகளிலும் பெண்களுக்கு 30 வீத இடம் வழங்கப்பட வேண்டும் என அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.