வேட்பாளர்கள் சிலர் தொடர்பில் பெப்ரல் அமைப்பு வௌிப்படுத்திய அதிர்ச்சி தகவல்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளரின் வேட்புமனுக்களை பொறுப்பேற்கும் நிகழ்வு நேற்று (07) இடம்பெற்றது.

அதன்படி, 35 வேட்பாளர்கள் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளனர்.

எவ்வாறாயினும், பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சியை தொடர்பு கொண்டு வினவிய போது, சில வேட்பாளர்கள் வேறு சில பலன்களை எதிர்ப்பார்த்து இவ்வாறு ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியுள்ளதாக தெரிவித்தார்.

ஜனாதிபதி வேட்பாளர் பதவி கிடைத்தவுடன் அனைத்து வேட்பாளர்களுக்கும் சுதந்திர ஊகட காலமொன்று அனைத்து அரச ஊடகங்கள் ஊடாகவும் கிடைப்பதாக அவர் தெரிவித்தார்.

அதேபோல், அனைத்து வேட்பாளர்களுக்கும் சுதந்திர தபால் சேவையும் கிடைப்பதாக அவர் தெரிவித்தார்.

இந்த சிறப்புரிமைகளை சில வேட்பாளர்கள் வேறொரு வேட்பாளருக்காக பயன்படுத்துவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த செயற்பாடு காரணமாக நாட்டிற்கு பாரியளவான பொருளாதார பின்னடைவு ஏற்படுவதாகவும், பொதுமக்களின் பணம் முறையற்ற வகையில் பயன்படுத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதன் காரணமாக இதுபோன்ற தரப்பினருக்கு ஜனாதிபதி வேட்பாளர் பதவி பெற்றுக் கொடுக்கப்படுவது தொடர்பில் மேலும் அவதானம் செலுத்தப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார்.

Related Posts