வேட்பாளரின் மோட்டார் சைக்கிள் திருட்டு

தேர்தல் பரப்புரைக்காக, வீடுகளுக்குச் சென்ற வேட்பாளரின் மோட்டார் சைக்கிள் திருடப்பட்டு உள்ளது.

சாவகச்சேரி பிரதேச சபையின் கைதடி தெற்கு வட்டாரத்தில் போட்டியிடும் செல்லையா ஜெயபாலன் என்பவர், கடந்த வாரம் கைதடி தெற்கில் தான் போட்டியிடும் வட்டாரத்தில் உள்ள வீடுகளுக்கு தேர்தல் பரப்புரைக்காக சென்றிருந்தபோது, வட்டார எல்லையில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு, கால்நடையாக ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று வாக்குக் கோரி பரப்புரைச் செய்துள்ளார்.

பின்னர் மீண்டும் மோட்டார் சைக்கிள் நிறுத்திய இடத்துக்கு திரும்பி வந்து பார்த்தபோது, அவ்விடத்தில் மோட்டார் சைக்கிளை காணவில்லை.

இது தொடர்பில், சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

முறைப்பாட்டின் பிரகாரம், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Posts