வேகமாக ஆயிரம் ஓட்டங்களை கடந்த குஷல்

இலங்கை அணியின் இளம் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குஷல் மென்டிஸ் சிம்பாப்வே அணிக்கெதிராக 28 ஓட்டங்களைப்பெற்றபோது ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 1000 ஓட்டங்களை கடந்த 2 ஆவது இலங்கை வீரர் என்ற பெருமையைப்பெற்றார்.

காலி சர்வதேச மைதானத்தில் இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையில் இன்று இடம்பெற்றுவரும் ஒருநாள் போட்டியிலேயே குஷல் மென்டிஸ் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார்.

குஷல் மென்டிஸ் இந்த மைல்கல்லை 28 இன்னிங்ஸ்களில் எட்டியுள்ளார்.

இதேவேளை, இதற்கு முன்னர் ரோய் டயஸ் 27 இன்னிங்களிலும் உபுல் தரங்க 28 இன்னிங்களிலும் ஆயிரம் ஓட்டங்களைக் கடந்திருந்த நிலையில் குஷல் மென்டிஸ் 28 இன்னிங்ஸில் 1000 ஓட்டங்ளைக்கடந்து உபுல் தரங்கவுட் 2 ஆவது இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

காலி சர்வதேச மைதானத்தில் கடந்த 17 வருடங்களுக்குப் பின்னர் இடம்பெறும் ஒருநாள் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 5 விக்கெட்டுகளை மாத்திரமிழந்து 316 ஓட்டங்களைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது துடுப்பெடுத்தாடும் சிம்பாப்வே அணி 117 ஒட்டங்களுக்கு இரண்டு விக்கெட்டுக்களை இழந்துள்ளது

Related Posts