வெஸ்ட்இண்டீஸ் வீரர் சாமுவேல்ஸ் பந்து வீச்சில் சந்தேகம்

வெஸ்ட் இண்டீஸ்–இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலி மைதானத்தில் நடந்தது. இதில் இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

samu-west

இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பேட்ஸ்மேனும், பகுதிநேர சுழற்பந்து வீச்சாளருமான சாமுவேல்ஸ் பந்து வீச்சு விதிமுறைக்கு மாறாக இருப்பதாக நடுவர்கள் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி) புகார் செய்துள்ளனர்.

இதனால் 34 வயதான சாமுவேல்ஸ் தனது பந்து வீச்சை ஐ.சி.சி. அங்கீகாரம் பெற்ற பரிசோதனை மையத்தில் பரிசோதனைக்கு அடுத்த 14 நாட்களுக்குள் உட்படுத்த வேண்டும் என்று ஐ.சி.சி. உத்தரவிட்டுள்ளது.

சாமுவேல்ஸ் 3–வது முறையாக பந்து வீச்சு சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். ஏற்கனவே 2008, 2013–ம் ஆண்டுகளிலும் சாமுவேல்ஸ் பந்து வீச்சு புகாருக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.

Related Posts