வெள்ளியன்று அனைத்துப் பாடசாலைகளுக்கும் விடுப்பு!

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் வரும் 10ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெறவுள்ளநிலையில் அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் 9ஆம் திகதி வெள்ளிக்கிழமை மூடப்படும் என்று மத்திய கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதனுடன் வாக்கு சீட்டுகளுக்கான பெட்டிகள் மற்றும் ஆவணங்களை விநியோகித்தல் மற்றும் ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படவுள்ள 19 பாடசாலைகளும், 2 கல்வியல் கல்லூரிகளும் இன்று முதல் வெள்ளிக்கிழமைவரை மூடப்படவுள்ளன.

இவ்வாறு மூடப்படவுள்ள பாடசாலைகள் அனைத்தும் மீண்டும் வரும் 12ஆம் திகதி திங்கள்கிழமை திறக்கப்படும் என்று கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Related Posts