இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் வெள்ளவத்தை உட்பட கொழும்பின் பல பகுதிகளைச் சேர்ந்த 9 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
வெள்ளவத்தையைச் சேர்ந்த 76 வயதுடைய நபர் ஒருவர் முல்லேரியா மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.
இதேபோன்று கொழும்பு 13ஐச் சேர்ந்த 69 வயதுடைய பெண்ணொருவரும் கொழும்பு 10ஐச் சேர்ந்த 72 வயது ஆணும் தங்கள் வீடுகளில் உயிரிழந்துள்ளனர்.
தெமட்டகொடையைச் சேர்ந்த 89 வயது நபர் ஒருவரும் வீட்டில் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை கொழும்பு 10ஐச் சேர்ந்த 48 வயதுடைய பெண்ணொருவரும் உயிரிழந்துள்ளார். வெல்லம்பிட்டியை சேர்ந்த 65 வயது நபர் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
வெல்லம்பிட்டியை சேர்ந்த 76 வயது பெண்ணொருவர் ஹோமாகம வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை கொழும்பு இரண்டைச் சேர்ந்த 57 வயதுடைய நபரொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 83 ஆக அதிகரித்துள்ளது.