வெள்ளம் வெளியேற யாழ் .சிறைச்சாலை கட்டடம் இடைஞ்சல்

கடந்த இரண்டு நாட்களாக யாழ்ப்பாணத்தில் பெய்த மழையால், ஜே – 80 கிராமஅலுவலர் பிரிவைச் சேர்ந்த மீனாட்சிபுரம் கிராமம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.

வெள்ளம் ஏற்படும் போது நீர் பாய்ந்து செல்லக்கூடிய மதகு மற்றும் கால்வாய் என்பவற்றை மூடி யாழ்ப்பாணம் சிறைச்சாலை கட்டப்பட்டுள்ளமையால், தங்கள் கிராமத்தில் தேங்கிய வெள்ளம் பாய்ந்தோட முடியாமல் உள்ளதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், கடற்கரையோரங்களில் இராணுவத்தினரால் கற்குவியல்கள் குவிக்கப்பட்டுள்ளமையால் வெள்ள நீர் வடிந்தோட முடியாமல் உள்ளதுடன் தாங்கள் அனைவரும் ஒன்று சேர்த்து காணியொன்றின் வழியாக வாய்க்கால் அமைத்து வெள்ளநீரை வெளியேற்றி வருவதாக கிராம மக்கள் கூறினர்.

இதேவேளை, தங்களுக்கு நிரந்தரமான வெள்ள வாய்க்கால் அமைத்து தரவேண்டும் என கிராமத்தில் வசிக்கும் 150 குடும்பங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

Related Posts