வெள்ளம் மற்றும் மண்சிரிவு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 202 ஆக அதிகரித்துள்ளது.
காணாமல் போனோரின் எண்ணிக்கை 96 ஆகும். காயமடைந்தோர் 63 பேர் ஆகும்.
களுத்துறை , இரத்தினபுரி , மாத்தறை மாவட்டங்களில் அதிகளவிலானோர் காணாமல் போயுள்ளதாக இடர் முகாமைத்துவம் தெரிவித்துள்ளது.
6 லட்சத்து 29 ஆயிரத்து 742 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
366 நலன்புரி நிலையங்களில் 77 ஆயிரத்து 432 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்ட்டுள்ளது.
தொடர்ச்சியான நிவாரணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.