பிரான்ஸில் பெய்து வரும் கனமழையால் பெரும்பாலான நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. சென் நதியின் நீர் மட்டம் சாதாரண அளவில் இருந்து ஆறு மீற்றர்களுக்கு மேல் உயர்ந்ததை அடுத்து பாரிஸ் நகரில் வெள்ள அனர்த்த முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
பிரபல்யம் மிக்க லூவர்( Louvre) மியூசியம் முடப்பட்டிருக்கிறது. நகரை ஊடறுத்துச்செல்லும் நிலத்தடி ரயில் மார்க்கங்களில் ஒன்றான RERC தடத்தில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியில் ஏற்பட்டுள்ள வெள்ளத்துக்கு நேற்று மட்டும் நான்கு பேர் பலியாகியுள்ளனர்.
போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளதால் சிறு படகுகள் மூலமே மக்கள் வெளியேற்றப்படுகின்றனர். பரிஸில் செஞ்சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெளிமாவட்டங்களில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.