வெள்ளக்காடாகக் காட்சியளிக்கும் கிளிநொச்சி!!

கிளிநொச்சியில் அண்மைக் காலமாகப் பெய்துவரும் கடும் மழை காரணமாக கண்டாவலைப் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட தருமபுரம் புளியம்பொக்கனை ஆகிய பகுதிகள் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கின்றன.

இதன் காரணமாக ஏராளமான மக்கள் தமது இருப்பிடங்களை விட்டு அயலவர், உறவினர் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை தருமபுரம் பகுதியில் உள்ள பாடசாலை சிலவற்றுக்கும் இன்று விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை மாவட்டத்தில் நிலவி வரும் சீரற்ற வானிலையால் 394 குடும்பங்களை சேர்ந்த 1234 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் ” சீரற்ற வானிலையால் கிளிநொச்சியில் 9 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

குறிப்பாக கரைச்சி மற்றும் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுகளே சீரற்ற வானிலையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக கரைச்சி பிரதேச செயலாள் பிரிவில், 54 குடும்பங்களை சேர்ந்த 186 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் கண்டாவளை பிரதேச செயலாள் பிரிவில், 340 குடும்பங்களை சேர்ந்த 1048 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்” இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts