இரண்டு வருடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வெளிவாரி பட்டப்படிப்பிற்கான பதிவுகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
எனினும் கற்கைக்காக இணைத்துக் கொள்ளப்படும் மாணவர்கள் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வெளிவாரிப்பட்டப்படிப்பின் தரத்தை பேண வேண்டும் என்பதன் அடிப்படையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், வெளிவாரி பட்டப்படிப்பிற்கான பல்லைக்கழக பதிவுகளுக்கான கட்டணங்களை களனி பல்கலைக்கழகம் அதிகளவு உயர்த்தியுள்ளதாக வெளிவாளி பட்டப்படிப்பை பாதுகாக்கும் அமைப்பின் இணைப்பாளர் மதுசங்க பண்டார குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி 7 ஆயிரத்து 500 ரூபாவாக இருந்த கலைதுறை பிரிவு வெளிவாரி பட்டதாரியின் பதிவு கட்டணம், 68 ஆயிரத்து 500 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.