வெளியானது ரஜினியின் கபாலி பாடல்கள் லிஸ்ட்!

கபாலி படத்தின் பாடல்கள் லிஸ்ட் நேற்று மாலை வெளியானது. இந்தப் படத்தில் மொத்தம் 5 பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

kabali-songs-

கபாலி படத்தின் இசை வெளியீடு வரும் ஜூன் 12-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது.

பிரமாண்ட விழாவாக இல்லாமல், ஆன்லைனில் இந்த இசை வெளியீட்டை நடத்துகின்றனர். அதற்கு முன்பாக, படத்தில் இடம்பெறும் பாடல்கள் என்னென்ன என்பதை வெளியிட்டுள்ளனர்.

1. உலகம் ஒருவனுக்கா…

இந்தப் பாடலை கபிலன் எழுதியுள்ளார். பாடலில் இடம்பெறும் தமிழ் ராப் வரிகளை விவேக் எழுதியுள்ளார். அனந்து, சந்தோஷ் நாராயணன், கானா பாலா ஆகியோர் பாடியுள்ளனர்.

2. மாய நதி…
உமா தேவி எழுதியுள்ள இந்தப் பாடலை அனந்து. பிரதீப் குமார், ஸ்வேதா மேனன் பாடியுள்ளனர்.

3. வீர துரந்தர…
இந்தப் பாடலையும் உமா தேவிதான் எழுதியுள்ளார். கானா பாலா, லாரன்ஸ் ஆர், பிரதீப் குமார் பாடியுள்ளனர்.

4. வானம் பார்த்தேன்…
கபிலன் எழுதியுள்ள இந்தப் பாடலை பிரதீப் குமார் பாடியுள்ளார்.

5. நெருப்புடா…
இந்தப் பாடலின் சிறப்பு, இதில் இடம் பெற்றுள்ள வசனங்கள் மற்றும் முத்திரை வசனங்களை ரஜினிகாந்தே எழுதியிருப்பதுதான். பாடல் வரிகளை அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ளார். சமீப நாட்களில் வெளியான ரஜினி படங்களில் எஸ் பி பாலசுப்பிரமணியம் போன்ற பிரபல பாடகர்கள், வைரமுத்து போன்ற கவிஞர்களின் வரிகள் இடம்பெறாத இசை ஆல்பம் இதுதான்.

வீரா படத்துக்குப் பிறகு, ரஜினி படங்களுக்கு தேவா அல்லது ஏ ஆர் ரஹ்மான் மட்டுமே இசையமைத்து வந்தனர். குசேலனுக்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்தார். இப்போது முதல் முறையாக சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.

Related Posts