வெளியாகியது வடக்கு மாகாண அமைச்சர்கள் விபரம் முடிவுக்கு வந்தது இழுபறி!

vickneswaranவடக்கு மாகாணசபையின் அமைச்சுப் பங்கீட்டு இழுபறி ஒருமாதிரி முடிவுக்கு வந்துள்ளது. அமைச்சுப் பதவிகளை ஏற்போர் பற்றிய விபரத்தை சத்தியப்பிரமாணம் செய்த பின் வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் ஜனாதிபதி மஹிந்தவிடம் கையளித்துள்ளார் என்று நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தப்பட்டியலின் அடிப்படையில் அமைச்சுப்பதவிகளை ஏற்கவுள்ளோர் விபரம்-

jaffna-ministor2

1. சூழலியலாளர் P.ஐங்கரநேசன் – வேளாண்மை, கால்நடை, நீர்ப்பாசனம், சூழல் அமைச்சர்
2. சட்டத்தரணி டெனிஸ்வரன் – மீன்பிடி, போக்குவரத்து, கிராம அபிவிருத்தி அமைச்சர்
3. கல்வியலாளர் T.குருகுலராஜா- கல்வி, கலாச்சார, அமைச்சர்
4. மருத்துவர் P.சத்தியலிங்கம்-சுகாதார அமைச்சு.

இவர்களில் டெனிஸ்வரனின் உள்ளூராட்சி அமைச்சு இரண்டரை வருடங்களின் பின்னர் சிவாஜிலிங்கத்துக்கு வழங்கப்படுமென்று தெரிவிக்கப்படுகின்றது.எனினும் இது குறித்த உறுதியான தகவல் பெறமுடியவில்லை.காலப்பகுதிகளுக்கு பிரித்துக்கொடுப்பதில்லை என்ற தீர்மானம் முதலமைச்சரிடம் இருப்பதாகவும் தெரியவருகின்றது.

Related Posts