வெளியாகியது ஊவா தேர்தல் முடிவுகள் ; ஐ.ம.சு கூட்டமைப்பு முன்னிலையில்

வெளியாகியுள்ள ஊவா மாகாண சபைத் தேர்தல் முடிவுகளின் படி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 349906 வாக்குகளைப் பெற்று 19 ஆசனங்களை வசப்படுத்தியுள்ளது.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சி 274773 வாக்குகளைப் பெற்று 13 ஆசனங்களையும், மக்கள் விடுதலை முன்னணி 36580 வாக்குகளைப் பெற்று 02 ஆசனங்களையும் பெற்றுக் கொண்டுள்ளன.

இதன்படி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 51.25 வீத வாக்குகளையும், ஐக்கிய தேசியக் கட்சி 40.24 வீத வாக்குகளையும், மக்கள் விடுதலை முன்னணி 05.36 வீத வாக்குகளையும் வசப்படுத்தியுள்ளன.

இதேவேளை சரத் பொன்சேகாவின் ஜனநாயகக் கட்சி இரு மாவட்டங்களிலும் 6076 (0.89) வாக்குகளைப் பெற்றுள்ளது. எனினும் ஆசனங்கள் எதனையும் அக் கட்சியால் பெற முடியவில்லை.

Related Posts