வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீட்டில் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை மீள இயக்குவதற்கு பல வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீட்டு அடிப்படையில் முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லங்கா சீமெந்து தொழிற்சாலையை மீள இயக்குவது தொடர்பாக குறித்த நிறுவனத்தின் தலைவர் லியனகே தலைமையில் முன்னாள் ஊழியர்கள், பொறியியலாளர்கள், தொழில்நுட்பவியலாளர்கள் உடனான கலந்துரையாடல் நேற்று ஞாயிற்றுக்கிழமை காங்கேசன்துறை தல்செவன விடுதியில் இடம்பெற்றது.

சீமெந்து தொழிற்சாலையை மீள இயக்குவதற்கு 4 ஆயிரம் கோடி ரூபாய் தேவை எனவும் குறித்த நிதியை முதலீடு செய்வதற்கு கொரியா, இந்தியா, சவுதி அரேபியா, சீனா உள்ளிட்ட பல நாடுகள் முன்வந்துள்ளதுடன் தமிழர் தரப்பில் ஒருவரும் இதில் முதலீடு செய்வதற்கு முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன் குறித்த நாடுகள் 30 வருட கால குத்தகை உட்பட சில நிபந்தனைகளுடன் முதலீடு செய்ய தயாராக உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

குறித்த தொழிற்சாலையை விரைவில் ஆரம்பிப்பதற்கான ஆரம்பகட்ட கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இதனைத் தொடர்ந்து தொழிற்சாலையை ஆரம்பிப்பதற்கான வேலைத்திட்டங்கள் விரைவில் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts