வெளிநாட்டு குடியுரிமை பெற்றுள்ள இலங்கையர் இரட்டை குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடியும்!

Passport_of_Sri_Lankaவெளிநாட்டு குடியுரிமை பெற்றுள்ள இலங்கையர்கள் ஆகஸ்ட் முதல் இரட்டை குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடியும்.

வெளிநாடுகளில் குடியுரிமை பெற்றுள்ள இலங்கையர்களுக்கு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் இரட்டை குடியுரிமையை பெற்றுக்கொள்ள முடியும் என இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

இரட்டை குடியுரிமை வழங்கப்படும் போது, செயற்படுத்தப்பட வேண்டிய புதிய சட்டதிருத்தங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் சூலானந்த பெரேரா தெரிவித்துள்ளார்.

இரட்டை குடியுரிமை வழங்கப்படும் போது, நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சட்டதிருத்தங்கள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Related Posts