வெளிநாட்டு கடவுச்சீட்டு வைத்திருப்போர் (foreign passport holders) வட மாகாணத்தின் சில பிரதேசங்களுக்குச் செல்வது பாதுகாப்பு காரணங்களுக்காக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு பயணம் செய்பவர்கள் அரச மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் அனுமதி பெற்றுகொள்ள வேண்டும்.
அதற்கமைய யாழ்ப்பாணம்- கிளிநொச்சி- முல்லைத்தீவு- மன்னார் (விடத்தல் தீவு வடக்கு) வவுனியா (ஓமந்தையின் வடக்க) ஆகிய பிரதேசங்களுக்கு செல்லவேண்டியவர்கள் அனுமதியைப் பெற்றுக்கொள்வது அவசியம். அதற்கான விண்ணப்பப்படிவங்கள் தொலைநகல் – மின்னஞ்சல் ஊடாக பாதுகாப்பு அமைச்சிற்கு அனுப்ப முடியும்.
விண்ணப்பப்படிவங்களில் விண்ணப்பதாரியின் முழுமையான பெயர்- வெளிநாட்டுக் கடவுச்சீட்டின் இலக்கம்- பயணிக்க எண்ணியுள்ள தினம்- மீளத்திரும்பும் தினம்- எவ்வாறு பயணிக்கவுள்ளார் (விமானம்- ரயில்- பொதுப் போக்குவரத்து) சொந்த வாகனத்திலென்றால் அதன் பதிவிலக்கம்- சாரதியின் பெயர்- காலம்- (விண்ணப்பித்திருக்கும் காலம்) குறித்த காலத்துக்குள் மீண்டும் மீண்டும் பிரதேசத்திற்கு செல்வது தொடர்பில் விபரங்கள் வழங்குதல் அவசியம்.
குறித்த பிரதேசத்தில் நடைமுறைப்படுத்தப்படும் திட்டத்திற்கு அல்லது முதலீட்டு நடவடிக்கைக்காக பயணிப்பதாயிருப்பின் சம்பந்தப்பட்ட நிறுவனம்- முதலீட்டு ஊக்குவிப்புச் சபை- பொருளாதார அபிவிருத்தி அமைச்சு அல்லது நல்லிணக்கத்திற்கான ஆணையாளர் நாயகம் காரியாலயத்தினூடாக அனுமதிப்பத்திரத்தை அனுப்பவேண்டும்.
தொலைநகல்- +94112328109
மின்னஞ்சல் modclearance@yahoo.co